m
நம் தன்மை, விசாரக்கோர்வை, ந்ம் வாழ்வின் குறிக்கோள், ஜீவன் muக்தன் நிலை, அதை அடைய உபாயம் எனபன் போன்ற விஷயங்களை தெள்ள தெளிய உரைய்க்கிறார் அசலபக்தன்

¿õӼ ƒ£Å¢¾ ÌȢ째¡û ±ýÉ?

(By அசல பக்தன்)

நம் தன்மை:

எல்லோரும் உலகில் வாழ்வதற்க்காகவே ஜனித்திருக்கிறோம்.  இதுகூட தெரியாதா என்ன என்று நீங்கள் கேட்கலாம்.  ஆனால் வாழ்வு என்பது என்ன?  நம் ஐம்புலங்கள் உலகிலிருந்து வரும் விஷயங்களை உட்க்கோண்டு அதற்க்கேர்ப்ப இயங்குகின்றன. நாம் உண்ணும் உணவுப்பொருட்களின் தன்மயை பொறுத்து நம் இயக்கம் உள்ளன.  ஸாத்வீக உணவுப்பொருட்க்களை உட்க்கொள்வோமானால் நம் இயக்கம் ஸாத்வீகமாக இருக்கும்.  ராஜஸீக உணவு உட்க்கொண்டால் நம் இயக்கமும் ராஜஸீகமாக இருக்கும்.  தாமஸீக உண்வு மந்த புத்தியுடன் நம்மை இயங்கவைக்கும்.  காரணம் ந்ம்முள் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் அடங்கியுள்ளன.  ஒவ்வொருபொழுது நாம் ஒவ்வொரு விதமாக இயங்குகிறோம்.  எதனால்?  இந்த மூன்று குணங்களின் சேர்க்கை வீதத்தை பொறுத்திருக்கிறது நம் இயக்கத்தின் தன்மை.

வாழ்வின் நோக்கம்:

இம்மூன்று குணங்கள்  நாம் உட்க்கொள்ளும் உணவுப்பொருட்களின் தன்மயை ஒட்டியுள்ளது.  எதற்க்காக உண்ணுகிறோம்?  உயிற் வாழ்வதற்க்காக, அல்லவா?  ஆனால் சிலர் உண்ணுவாதற்க்காகவே வாழ்கிறார்கள்.  உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா? அல்ல. பின் நம் வாழ்வின் குறிக்கோள் என்ன?  நாம் எங்கிருந்து வந்தோம்?  எப்படி வந்தோம்? எதற்க்காக வந்தோம் என்ற கேள்விகளை கேட்டுப்பாருங்கள்.  விடை கிடைக்கிறதா?  அம்மாவின் உதரத்திலிருந்து வந்தோம்.  உதரத்தில் கருவாக வந்து வளர்ந்து முழு வள்ர்சியானபிறகு கர்ப்ப ப்பை வழியாக வெளிவந்தோம். உயிர் வாழ்வாதற்க்காக் வந்தோம்.  இதுதானே உண்மை? தவறு.  கரு எங்கிருந்து உருவானது? எதற்க்காக உருவானது?  என்ப்போன்ற வினாக்களுக்கு விடை காணவேண்டும்.  உடல்மூலமாக உலகில் இயங்குகிறோம். உயிர் உள்ளதால் வாழ்கின்றோம்.  உயிர் நிலைத்து நிற்க உணவு உட்க்கொள்கிறோம்.  ஆனால் உயிர் என்பது என்ன?  எங்கிருக்கிறது? எங்கிருந்து வந்தது?  விடை காண இயலாத ஒரு வினா. உள்நோக்கி நம் கவனத்தை திருப்பினால் விடை கிடைக்கும்.  நம்மை நம்முள் இருந்து இயக்குவது யார்?  நான் யார்? எனப்போன்ற வினாக்களுக்கு விடை காணவேண்டும்.  நான் உடலா? அல்ல மனமா? அல்ல புத்தியா? அல்ல.  அஹம் என்ற நினைவா? அல்ல. பின் நான் என்பதின் பொருள் என்ன?  இப்படி பகவான் ரமணமஹார்ஷி தந்துள்ள ஆத்ம விசாரத்தை கைய்யாண்டால் விடை கிடைக்கும்.  ஆனால் இதை ஒரு வினாவாக செயாளக்கூடாது.  ஒரு சாதனையாக கொள்ளவேண்டும்.  எப்படி? 

ஆத்ம விசாரம்:

மேல்கூறியதுபோல் நம் கவனத்தை உள்நோக்கி செலுத்தி "நான் யார்" என்ற விசாரத்தை கையாண்டால் நமக்கு என்ன விடை கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும்.   நான் உடலா, அல்லது மனமா அல்லது புத்தியா அல்லது அஹம் என்ற உணர்வா என்று கண்டுபிடிக்க வேண்டும்.  அது எப்ப்டிஇது ந்ம் புத்திபூர்வமாக அறிய வேண்டிய விஷயம்.  இதுவரை ஓர் விசாரமாகவே இதை கையாளவேண்டும்.  நான் உடலா? நாம் பேசும்பொழுது உடலை தொட்டு நான் என்றல்ல்வா சொல்கிறோம் அப்போ உடல்தானே "நான்" என்ற வினா எழலாம்.  "எனக்கு பசிக்கிறது"  "என்னுடல் நல்ம் கெட்டுவிட்டது"  "என்னால் ந்டக்க இயலாது" என்றெல்லாம் சொல்லும் பொழுது நாம் உடலை பற்றித்தானே சொல்கிறோம்ஆம்.  ஆனால் பாருங்கள் என், எனக்கு, , என்னுடைய, என்னால் என்றெல்லாம் சொல்லும்பொழுது அதில் உடமை நினைப்பு இருக்கிறதல்லவா அதாவது நான் வேறு, எனது உடல் வேறு என் ஆகிறதல்லவாஅதாவது உட்ல் எனது உடமையாகும்.  அதேபோல், "நான் நினைக்கிறேன்", "எனக்கு கவலையாக இருக்கிறது" "என் மனம் ஓர் நிலையில் இல்லை" என்றெல்லாம் கூறும் பொழுது, அங்கேயும், நான் வேறு என் மனம் வேறு என்றாகிவிட்டதல்லவா இங்கேயும் மனம் எனது உடமை என் ஆகிவிடுகிறது அல்லவாஇதுபோல் புத்தி ச்ம்பந்தப்பட்ட விழயங்களை ஆராய்வோம். "எனது அறிவில்", "என் கருத்தில்", "எனது நினைவில்" என்றெல்லாம் உரைக்கும் பொழுதும், நான் வேறு எனது கருத்து, அல்லது எனது அறிவு வேறு என கோள்கிறோம் அல்லவா இதிலிருந்து என்ன தெரிகிறது"நான்" என்பது நம் உடல் அல்ல, மனமல்ல், புத்தியும் அல்ல எனவாகும் இல்லையா?

நான் ஓர் விசாரமா?:

அப்ப்டியானால் இந்த "நான் யார்"எப்படி அறிவது? நாம் பேசும் பொழுது "நான்" "எனது", "என்னால்" என்று சொல்லாமல் எதையாவது குறிப்பிட முடியுமா? ஆதலால் இந்த நான் என்ப்படுவது ஓற் நினைவு தானா ஆம் அது நம் விசாரங்களின் அடிப்படையாகும். இந்த "நான்" என்பதை ஒரு மூல விசார்மாக கொண்டு நாம் உரையாடுகிறோம்.  அதனால் இந்த "நான்" நம் விசாரங்களினெழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ள மூலவிசாரமாக உள்ளது என தெள்ளென தெரிகிறது இல்ல்யா? இந்த முதல் விசாரத்தை நோக்கி நம் கவனத்தை திருப்பினால், அதாவது வேறொன்றும் நினைக்காமல் "நான்" என்ற மூல விசாரத்தை மட்டுமே பின்பற்றி சென்றால், அது பின்வாங்கிவிடும்.  கொஞ்ச நேரத்தில் அதன் மூலத்திலே போய் அடங்கிவிடும். அதன் மூலம் (இருப்பிடம்) ஏது? அதைதான் நாம் "மனம்" என குறிப்பிடுகிறோம். இது சாதனை மூலமாகத்தான் உணரமுடிய்ம்.  விசார வடிவில் புரிந்துகொள்ள முடியாது.  இது எப்படி முடியும்ஒரு உதாரணாத்தை கொண்டு பாற்ப்போம்.  

ஒரு மழலை சிறுவன் தன் களிகோப்பைகளை வைத்து விளயாடுகிறான் என்று வைத்து கோள்வோம்.  அவன் சேஷ்டைகளை நாம் உன்னிப்பாக பாற்த்து கொண்டிருக்கிறோம். அவன் கோப்பைகளை மேலும் கீழும் உறுட்டியும் புரட்டியும் பாற்க்கிறான்.  சிலவற்றை உடைக்கிறான்.  இன்னும் சிலவற்றை சிதைக்கிறான்.  மற்றும் சிலவற்றை தூர எறிகிறான்.  நாம் கோபம் கொள்ளாமலும் அவனிடம் போகாமலும் இருந்த இடத்திலிருந்தே உற்று பாற்த்து கொண்டிருக்கிறோம்.  சிறுவனின் கவனம் தானாக ந்ம்மிடம் திரும்புகிறது.  நாம் ஒன்றும் சொல்லாமலும் முகமாற்றம் இல்லாமலும் இருப்பதை பாற்த்து சிரிக்கிறான்.  அப்போதும் நாம் பேசாமல் அவனையே உற்று பார்க்கிறோம்.  சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல நம்மை நோக்கி நகர்ந்து வருகிறான்.  முடிவில் நம்மை தொட்டு பாற்க்கிறான்.  நாம் அசையாமல் அவனையே உற்று பாற்க்கிறோமே தவிர பேசவில்லை.  அவனை அதட்டவில்லை.  அப்பா நம்மை பாற்க்கிறார் ஆனால் நம்மை ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்து நம்மிடம் வந்து நம் மடியில் ஏறி அமர்கிறான்.  நம் கன்னத்தை கிள்ளி பார்க்கிறான்.  நாம் அசையவில்லை. முடிவில் தானாக தோய்ந்து படுத்து உறங்கிவிடுகிறான்.  நாம் ஒன்றும் சொல்லாமலே அவன் சேஷ்டைகள் நின்று விடுகிறது, அவன் உறங்கிவிடுகிறான் இல்லையா?

இப்போது நம் மூலவிசரத்தை அந்த சிறுவனாக கொள்வோம்.  நாம் பிரிந்து நின்று இந்த "நான்" என்ற மூலவிசாரத்துடன்  வேறு விசாரங்கள் எழாமல் அல்லது கலக்கமல் அதன் போக்கை கவனிப்போம்.  அந்த சிறுவனைபோல் இந்த "நான்" அதன் இருப்பிடாத்திர்கு சென்று அடங்கிவிடும். நம் கவனம் மட்டும் அதை நோக்கியே இருக்க்வேண்டும்.  அது தானாக ஓய்ந்து அடங்கிவிடும்.  இதைத்தான் "ஆத்ம விசாரம்" அல்லது "Meditation"  என்று சொல்கிறோம். இது வெகு எளிதில் கைவரக்கூடிய சாதனை அல்ல.  தொடர்ந்து பல நாள் கைய்யாளவேண்டிய ஒரு மகத்தான சாதனையாகும்.  இப்படி "நான்" என்ற உணர்வு அடங்கிவிட்டாள் அதாவது மூல விசாரமே இல்லையெனில் அங்கு மனம் இல்லை.  காரணம் மனம் என்ற ஒன்று தனித்து இல்லை. தொடர்ச்சியாக வந்துபோகும் பலவாறான விசாரங்களின் சேர்க்கையே "மனம்" எனப்படும். முதல் விசாரமான் "நான்" அடங்கிவிட்டால் மற்று விசாரங்களுக்கு ஆதாரமில்லாமல் போய்விடும்.  ஆகையால் யாதொரு விசாரமும் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுது மனம் என் ஒன்றுக்கு இடமேது? அப்பொழுது அங்கு என்ன உள்ளது? எல்லாமாக ஒன்றாக உள்ளது.  அதென்ன எல்லாமாக உன்றாக உள்ளதுஅங்கு ஒன்றும் இல்லையே என வினவலாம்.  அங்கு விசாரத்தின் மூலம் கூட இல்லை.  பாற்ப்போம்.

விசாரத்தின் அழிவு:

 

ஏகாக்கிர சித்தத்துடன் நாம் இந்த "நான்" என்ற விசாரத்தை உற்று நோக்குவோமானால் அது ஒளிந்தூடிவிடுகிறது.  கடைசியில் மறைந்து போய் விடுகிறது. அப்போது நமக்கு என்ன புலப்ப்டுகிறது?  எல்லாமாக ஒன்றாக் ஓர் இருப்பு மட்டுமே புலப்படுகிறது.  அல்லாது ஒன்றுமில்லா சூனிய அவஸ்தை எற்ப்படுவதில்லை.  எப்படி?  சூனியம் என்றால் ஒன்றும் இன்மை.  ஆனால்  ஏதோ நமக்கு புலனாகிறது.  அது என்ன?  நம் இருப்பு சத்தியம் தானே?  நாம் இருப்பது புலப்படுகிறது?  விசாரமே இல்லாமல், மனம் அடங்கிவிட்ட அத்தருணத்தில் ஏதோ புலப்படுவது ஏன்?  அதை தான் நாம் "Consciousness" "அறிவு", "ஜனானம்" என கூறுகிறோம்.  இந்த அறிவு புறமிருந்து வரவில்லை.  அது நம்முள் உள்ள "உண்ர்வு" என கூறப்படும் தன்மை என்றே கூறவேண்டும்.  இதை தான் "GOD" என சொல்கிறோம்.  ஆக, "நான்" என்ற முதல் விசாரத்தை அடக்கிவிட்டால் நம் சுய வடிவம் (உருவம் இல்லை) அதாவது நமது "இருப்பு" என்ற தன்மை புலப்படும்.  இந்த் இருப்பு தான் நம் "Real Nature". இதை பல பேரிட்டு அழைக்கிறோம்.

 

ஜீவன்முக்த நிலை:

 

இந்த இருப்பு நீடிக்குமானால், அதாவது நாம் இந்த உலகில் வாழ்துகொண்டே இந்த இருப்பில் ஸ்திரமாக இருப்பொமானால், அதை தான் "ஜீவன் முக்தன்" நிலை என கூறப்படுகிறது.  ஒருதரம் இந்த இரகிசியம் புரிந்து விட்டால், அதாவது இந்த நிலை கிடைத்து விட்டால், நம் ஜீவித குறிக்கோளை அடைந்துவிடுகிறோம்.  பிறகு ஜீவிப்பது எதர்க்கு என வினவலாம்.  இந்த ஜெடமானது அதன் கற்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.  மன நிலையில் நாம் ஜீவன்முக்தற்காக்ள் ஆனாலும் உடல் நிலை வேறு அல்லவா.  உடல் நமது உடமை பொருள்.  அது நாம் அல்ல.  ஆனால் அது ந்ம்முடைய வாகனம்.  அதன் வினயை அதுவே அனுபவிக்கவேண்டும்.  ஆனால், அப்பொழுது ஜீவன்முக்தற்கள் அந்த அனுபவத்தில் இருக்க மாட்டார்கள்.  ஏனெனில் உலகிலுள்ள எல்லா உடலையும் போல இந்த உடலை பாவிப்பர்ரக்ள்.  அவர்காள் நிலை ஒரு ஸமபாவனையில் இருக்கும்.  அதாவது "நான்" எல்லாற்றிலும் உள்ளேன், எல்லாம் என்வ்சம் என்ற நிமைவில் இருப்பாரகள்.  இப்பொழுது "நான்" என்ற நினைப்பு ஓர் விசாரமல்லவா என்று தோன்றலாம்.  அல்ல.  இந்த "நான்" ஆத்மாவை குறிக்கிறது. அதாவது "இருப்பு" என்ற நிலையில் உலகெல்லாம் நிறைந்து இருக்கும் ஓர் தன்மயை குறிப்பிடுகிறது.  இறைவன் என்று கூறுவதும் ஜீவன்முக்தற்கள் கூறும் "நான்" என்பதும் ஒன்றே. 

 

அப்படியானால் நாம் இறைவனாகி விடுகிறோமா?  நாம் வேறு இறைவன் வேறு என்று இருந்தால் தானே "நாம்" இறைவனாகிவிடமுடியும்.  இங்கு நமக்கு உதயமாகும் அறிவு என்னவென்றால் நாம் வேறூ இறைவன் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றாக இருக்கும் இருப்பு தான் "ச்த்தியம்".  இதைத்தான் "அத்வைதம்" சுட்டிக்காட்டுகிறது.  ஒன்றுமட்டுமாக உள்ள இருப்பு.  வேறொன்றும் இல்லாத தன்மை.  இந்த வாழ்வின் இரகசியம் புலப்பட்டு அதற்க்கு பின் வாழும் வாழ்வு உடலளவில் வேறாக தோன்றினாலும் ஸமபாவனையுடன் இருக்கும்.  அதாவது எல்லாம் ஒன்றாக, வேறொன்றின்ல்லா அவஸ்தை. 

 

மூல வடிவு:

 

இப்படி நம் மூலஸ்தானத்தை அடைவதை தான்  "நம் ஜீவித குறிக்கோள்" அல்லது "நம் வாழ்வின் நோக்கம்" என்று கூறியுள்ளேன்.  எல்லோரும் இந்த நிலையிலிருந்து வந்தவர்கள் தான்.  அதே நிலைக்கு திரும்ப போகவேண்டும்.  ஏனெனில், நாம் நம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓர் இடத்திற்க்கு சென்றால் திரும்ப நம் இடத்திற்கே வந்து விடுவது வழக்கம்.  அதுபோல், சத்திய நிலையிலிருந்து அசத்திய நிலைக்கு வந்த நாம், திரும்ப நம் இருப்பிடமாகிய சத்திய நிலைக்கு திரும்பவேண்டியது அவசியம் தானே?  இதுவே "நம் ஜீவித குறிக்கோளாக" அல்லது "ந்ம் வாழவின் நோக்கமாக" இருக்கவேண்டும்.  அப்பொழுது தான் நம் ஜென்மம் ஸாபல்யமாகும்.

 

"எல்லோரும் ந்ன்றாய் இருக்கவேNdum,

அதற்க்கு ஈசன் கணேசன அருளல் வேண்டும்"

 

               Go to top                                                         HOME                                            Contact                         

                                                                                    

   Click on the  "HOME" link  here or "BACK"  button (and not the " X " close button)  of  brow

                                                                                                    

  View My Guestbook

  Sign My Guestbook