|

பஜ
கோவிந்தம்
(வாழ்க்கை தத்துவம்)
அசலம்
:முகவுரை:
முன் இதழ்களில் வாழ்வின்
லக்ஷியம், வாழ்வின் ரகசியம் என்பதை ஆராய்ந்தோம். ஆனால் வாழ்க்கை எப்படி
வாழ்வேண்டும் என் திடடவட்டமாக பார்க்க் வேண்டும். அதர்க்கு வாழ்க்கை
தத்துவம் அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை.
ஞானிகள் சான்றிதழுடன்
தந்தால்த்தான் அது நமக்கு ஏற்க்கக்கூடியதாக அமையும். அப்படி
பார்க்கும்போது சிரு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி,
தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை
நாட்டி, ஸர்வஞ்பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்ததை (HINDUISM)
உலகிர்க்கு தந்து,
நாலு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து ஸனாதன தர்மத்தை காக்கும் பொறுப்பை
அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள்
அவர்கள் ந்மக்கு தொகுத்தளித்த இந்த
“பஜ
கோவிந்தம்”
என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாக பின்பற்றக்குடிய சான்றிதழ்
வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின்
நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிக தெளிவாகவும்,
ந்ளினமாகவும் இதில் தந்துள்ளார்.
ந்ம் வாழ்வின் தவறான
நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய
வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை ஏவன, அதனால் நமக்கு நிகழும்
பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்கணம் அமைய வேண்டும் எனக்கூடிய
தத்துவங்களை தெள்ள தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில்
தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களை சரிவர கிரஹித்து அவைகளை அய்ராது
சரிவர நாம் பின் பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிக சீரும் சிறப்பும்
பெற்று, வளமுடனும், ஆற்ற்லுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து
நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும்
அய்யபில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் ஏவை என பார்ப்போமா?
காவியம்:
1
பஜ கோவிந்தம் பஜ
கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே
காலே
நஹி நஹி ரக்ஷதி
டுக்ருங்கரணே
ஸாரம்:
கோவிந்தனை பஜி, கோவிந்தனை
பஜி, கோவிந்தனையே பஜி ஹே! தெளிவில்லாத புத்திஹீனனே.. உனது கடைசி காலம்
(மரணம்) உன்னை நெருங்கும்போது, உனது இலக்கணம், வ்யாகரணம் (முதலிய ஞானம்)
உன்னை காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிலையில் இருக்கும்(
கோவிந்தனை என்னேரமும் பஜி.
விளக்கம்:
பஜ என்பத்ர்க்கு பஜிப்பது
அல்லது, ஜெபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று பொருள்.
நித்திய சுத்த ஆனந்த நிலைக்கு பெயர் கோவிந்தம். எப்பொழுதும் அந்த
நிலையில் இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் கோவிந்தன் எனப்படுவார்.
மனித ஜென்மம் வேண்டுவது என்ன? ஆனந்தம். அந்த நிலைக்கு உடமை யார்? ஸ்ரீ
கிருஷ்னன். ஆகயால் எப்பொழுதும் அவனை நினை அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி
சங்கரர் புத்திகெட்டு உழலும் மனித ஜாதிக்கு உபதேசம் சைய்கிறார். அவர்
க்ஷேத்திராடன்ம் செல்லும்பொழுது ஒரு மஹா வித்வான் சாஸ்த்ர கிரந்தங்களை
வைத்துக்கொண்டு அதன் இலக்கணத்தை(வியாகரணம்) வாய்ப்பாடம் சைய்வதை
கண்டார். அதை சுட்டிக்காட்டி எழுதினது இந்த ஸ்லோகம். ஏனென்றால், நாம்
எல்லோரும் நம் புஸ்த்தக ஞானத்தில் மிகவும் சமயம் கட்த்துகிறோம். தைவ
சிந்தனயோ நம் சுய நிலை சிந்தனையோ இல்லாமல் எப்பொழுதும் உலக சம்பந்தப்பட்ட
காரியங்களில் நம்து நேரத்தை சிலவிடுகிறோம். சிறிதளவாவது ஆத்ம சிந்தனை
தேவை என கூறுவதாக அமைய்துள்ளது இந்த உபதேசம். நாம் மரணத்தை அணுகும்போது
நாம் படித்த விஷயங்கள் (உலகஞானம்) நம்மை காப்பாற்றாது. ஆத்மஞானம்
ஒன்றுதான் அதர்க்கு மருந்து என பொருள். அதை அறிய எந்த புஸ்தகமும் உதவாது.
மஹாஞானிகள் அவர்கள் தபோ நிலையிலிருந்து தெரிந்துகொண்ட ஆத்ம ஞானத்தை
நமக்கு பலகிரந்தகள் மூலமாக தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ கோவிந்தம்.
2
மூட ஜஹீஹி தன ஆகம
த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி
வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய
சித்தம்
ஸாரம்:
ஹே மூடா! திரவ்யத்தில்
உள்ள பேராசையை (பணத்தாசை) விடு. இந்த பேராசை ஒழிய மனதில் நல்ல்
விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்மபலனை மிக
சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.
விளக்கம்:
மனித சுபாவம் ஸுகம்
தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்து கொண்டது.. தனம் என்று சொல்வது,
பணத்தால் கிடைக்க கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை
பிடித்து அதன்மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம். அதனால் நம் மனம்
ச்ஞ்சலப்படும். ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம்
கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மன்ம். இந்த த்னத்திலுள்ள
(ஸுகங்களீலுள்ள) பேராசயை விடு என கூறுகிறார். ஆனால் நமக்கு தனம்
இல்லாமல் வாழ்முடியாதே. அதெப்படி பணத்தாசையை விடுவது எனவினவலாம்.
கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை கருதாது
கர்மம் பண்ணவேண்டும் என கர்ம யோகத்தில் பார்த்தோம். அப்படி மனதில்
பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே
கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள் என பொருள் கொளள்ளவேண்டும்.
“கர்மன்யேவாSதிகாரஸ்தே
மாபலேஷு கதாசன”
என்று ஸ்ரீ கிருஷ்ணன்
கீதையில் சொன்னதுபோல்
“கர்மம்
செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்”
என கூறியிருக்கிறார். அதாவது, கர்மம் பண்ண ந்மக்கு அதிகாரம் உண்டு.
என்ன கர்மம் பண்ணவேண்டும், எப்ப்டி பண்ணவேண்டும் என தீர்மானிப்பது நம்
கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நம்க்கு
கிடைப்பதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? கர்மபலன் நாம் செய்யும்
கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது
என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ அவர்
கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி
கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும்
வைத்துக்கொள் என பொருள் கொள்ள வேண்டும்..ஆனாலதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.
3
நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்தய வாரம்
வாரம்
ஸாரம்:
ஸ்த்ரீகளுடைய
மார்பக்கத்தயும் நாபிதேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே.
அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்ற்ம
மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்..
விளக்கம்:
முதல் ஸ்லோகத்தில்
“ஆசையை
(மோஹம்)”
விடு என கூறினார். இதில் “காமத்தை“
(பாசம்) விடு என உபதேசிக்கிறார். ஏன் ஸ்த்ரரீகளின் மாற்பிடத்தையும் நாபி
தேசத்தையும் குறிப்பாக சொல்லவேண்டும்? இவைதான் நம் காம உணர்ச்சியை.
தூண்டுகிறது. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும்
பார்க்க வேண்டும். இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல.
ஸ்த்ரீகளை பொறுத்தமட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின்
மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின்
தோற்றமே தவிர சாச்வதமல்ல என பொருள் கொள்ளணும். ஆக, ஏதொரு வஸ்து நமக்கு
காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தை
கொள்ளவேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தை துற என
கூறுகிறார். அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மனோ
நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில்
தந்துள்ளார்.
4
நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய
சபலம்
வித்தி
வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸ்மஸ்தம்
ஸாரம்:
தாமரை இலயில் தத்தளிக்கும்
ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும்,
அநித்தியமாகவும் வ்யாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை
உடையவைகளாகவும் அமைந்துள்ளது என ஆறிவாய். .
விளக்கம்:
ந்மது ஜீவதம் அநித்தியம்
என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை கொண்டதும் ஆக
அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உபமையுடன் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ
சங்கரர். தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கிநிற்க்கும்
ஜெலபிந்துக்கள் எப்படி அந்த தாமஇலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ
அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள்
தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும்
தத்தளித்துக்கோண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம்.
சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என் பொருள்.
இதைவிட வேறு உகந்த உபமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய
தத்துவத்தை போதிக்க இந்த உபமையை மைய்யாண்டிருக்கிறார்!
5
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோsபின
ப்ருச்சதி கேஹே
ஸாரம்:
உன்னால் எவ்வளவு காலம்
சம்பாதிக்க முடியுமோ, அது நாள் வரை உன்னை சார்ந்தவர்கள் உன்னிடம்
நெருங்கி பழகுவார்கள்.எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்துபோகிறதோ
அப்பொழுது யாரும்–உன்
குடும்பத்தார் கூட-உன்னிடம் பேசமாட்டார்கள்
விளக்கம்:
நாம் கண்கூடாக பார்க்கும்
ஓர் சத்தியநிலையை எவ்வள்வு ஸுலபமாக சித்ரீகரித்திருக்கிறார்! நம்மால்
எவ்வள்வு நாள் ஸம்பாதித்து பண் உதவி பண்ண இயலுகிறதோ அதாவது மற்றவருக்கு
எவ்வளவு காலம் ந்ம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மை சார்ந்தவர்கள்
ந்ம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள். உலக நியதிப்படி பார்த்தால், எல்லோரும்
மற்றவ்ரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள். நமக்கு வயதாகி
வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி ந்ம்மால் மற்றவருக்கு
உபயோகமில்லாமல ஆகிவிடும்பொழுது, நம் சொந்த குடும்பத்தினரும் கூட
ந்ம்மிடம் ஒட்டி உற்வாட தயங்குவார்கள். பேசுவதர்க்கு கூட அருகில் வர
மாடார்கள். இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற
தத்துவத்தை மிக எளிதாக சுட்டிகாட்டியிருக்கிறார்.
6
யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம்
கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின்
காயே
ஸாரம்:
(உன்) உடலில் எவ்வளவு
காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை உனது குடும்பத்தினர் உன் நலனில்
இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள்,
உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள்.
விளக்கம்:
பந்தம் பாசம் என்பது
உடலில் உயிர் உள்ளதுவரை தான். உயிர் போய் தேஹம் சடலமாகிவிட்டால்,
அதர்க்கு பெயர் பிணம். பிணத்ததை பார்த்து யார்தான் பயப்படமாட்டார்கள்.
அப்பொழுது மனைவிகூட அந்த சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று
குறிப்பாக சொல்லணும்? ஏற்றவும் பாஸ்த்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி
தானே. ஸ்த்ரீகளை கருதும்போது, இங்கு பனைவி என்பதை கணவன் என்று
எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பாதகமான
தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்! வாழும்போது, இந்த உடலை நாம்
போற்றீ கோண்டாடுகிறோம். அதர்க்கு எல்லா ஸௌகரியங்களையும் சைய்துகொடுத்து
மகிழ்ச்சி அடைகிறோம். இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற
உண்மை ந்மக்கு தெரிவதில்லை. மரணத்திர்க்கு பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது
என்ற உண்மையை விளக்குகிறார்.
7
பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:
ஸாரம்:
பால்ய வயது விளையாட்டில்
செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லபத்தில் மூழ்கிவிடுகிறது,,
முதிர்ச்சிகாலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்)
ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை
விளக்கம்:
வாழ்க்கை எவ்வண்ணம்
வியர்த்தமாகிறது என மிக தெளிவாக சித்ரீகரித்திருக்கிறார். குழந்தை
பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம். அப்பொழுது
சிந்தித்து வேலை செய்ய இயலாது. குட்டிக்காலம் இப்படி
வியர்த்தமாகிவிடுகிறது. பௌரனானால் ஸ்த்ரீசுகத்தில் காலம் ஓட்டுகிறோம்.
ஸ்த்ரீ ஸுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா
வித ஸுகங்களையும் அது குறிக்கிறது; இப்படி உலக்த்திலுள்ள ஸகல
சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது. அப்பொழுதும் நம் சத்திய
நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை. முதிர்ச்சியடைந்தால் நாம்
தனித்துவிடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில
ஆழ்ந்துவிடுகிறோம். நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேட்த்தி
முதலியவர்கள் நலனுக்காக கவலைப்படுதல், ந்ம்மை யாரும் கவனிக்கவில்லையே
என்ற கவலை, நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வநேரமும்
கவலைப்படுவதிலேயே நம் சமயத்தை கழிக்கிறோம். அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை
(நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை. ஆத்மஞானம் பெற பாடுபடுவதில்லை.
இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாக கழித்துவிடுகிறோம். பகவத் சிந்தனை
(ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை. பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது?
எப்படி ஜீவன்முக்தன் நிலையை ஏய்வது.
8
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க:
குத ஆயாத:
த்த்வம் சிந்தய த்திஹ
ப்ராந்த:
ஸாரம்:
உன்னுடய ப்ரியதமன் அல்லது
ப்ரியதமை யார்? யார் உன்னுடய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகர்ம்
(குடும்பஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது. நீ யாருடையவன்? நீ யார்?
எங்கிருந்து வந்தாய்? இப்படி (வழ்க்கை) தத்துவத்தை பற்றி சிந்தனை செய்
சகோதரா!
விளக்கம்:
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை
ஆத்ம சிந்தனையில் ஈடுபட சொல்கிறார். யார் மனைவி அல்லது பர்த்தா? யார்
புத்திரன்? நான் யாருடையவன்? நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த
ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்ற தத்வார்த்தமாக சிந்தனை
செய் என பொருள். ஸ்ரீ ரமண மஹர்ஷியின்
“நான்
யார்”
என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் ந்ம்மை அறிந்துகொள்ள
வேண்டும். இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது. உலகத்தை அறிவதர்க்கு
முன் யார் அறிகிறார்கள் என பார்க்க வேண்டும். (Know
the Knower). அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பாற்ப்பதை (Object)
அறிய இயலாது. அந்த
ஞான்ம் பூர்த்தியாகாது.. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்க
சொல்கிறார்.
9
ஸத் ஸங்கத்வே
நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே
நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல
தத்வம்
நிச்சல தத்வே ஜீவன்
முக்தி:
ஸாரம்:
ஸத்துக்களுடைய
(புண்ணியாதமாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை
கிடைக்கும். பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட
செய்யும். மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும்.
ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.
விளக்கம்:
ஆத்ம விசாரம் செய்ய ந்மக்கு
வ்ழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய சங்கம். அதாவது ந்ல்
வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு. அப்படி அவர்களிடம் உறவு கொண்டால்
அவர்கள் நம்க்கு வழிகாட்டுவார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால்,
பந்தபாசங்கள் ஒழியும். எப்படி? மேலே சொன்ன ஆத்ம விசார பாதயில் செல்ல
அவர்கள் நமக்கு உதவுவார்கள். அப்படி ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Deluision) அக்லும். அதாவது மாயை
அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால்
ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF)
ந்மக்கு புலப்படும். அப்படி
புலப்பட்டால் அதுவே ந்மக்கு மன அமைய்தியை தந்து இந்த உடலில்
இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையை தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி
“Self
Realization”
என கூறியிருக்கிறார். திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி
நாதர் “ஸ்வானுபூதி”
என குறிப்பிட்டுள்ளாற். இதைத்தான் ஆட்ம ஸாக்ஷாத்க்காரம் என்று
கூறுகிறார்கள். அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது. இதுதான் நம்
வாழ்க்கை லக்ஷியம்.
10
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:
ஸாரம்:
முதிர்ச்சி அடையும்போது
(அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின்
பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்?
(ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?
விளக்கம்:
உலக பந்தம் பலனில்
அடங்கியது. ந்மக்கு பலன் இல்லையேல் நாம் யாருடனும் குட்டுறவு
வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது
நம்க்கு காம விசாரங்கள் அடங்கிவிடுகிறது. முதியோர்களில் சிறுவர்களில்
காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை. ஒரு தடாகத்தில் (ஏரி)
ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதர்க்கு தடாகம் என்ற பேர் போய்விடுகிறது.
அதேபோல் ந்ம்மிடம் தனமில்லையேல் ந்ம உறவினர்கள் ந்ம்மை நாடி
வரமாட்டார்கள். அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டாள் சுற்றத்தார்
விலகிவிடுவார்கள். ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை ந்மக்கு
கிடையாது முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியை காண்பித்தார்.
எதர்க்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து
வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.
11
மாகுருதன ஜன யௌவ்வன
கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம்
ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச
விதித்வா
ஸாரம்:
தனத்திலோ (ஸுகம்),
குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால்
காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது. மாயையால் உண்டான இந்த
உலகவாழ்வை விட்டு (என்றேன்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை அறிந்து அதில்
மூழ்குவாயாம.
விளக்கம்:
உலகஸுகம் தனத்தால்
கிடைப்பது. தனம் சாச்வதமல்ல. அதேபோள் குழந்தை/யௌவன பருவவங்கள்
சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்குடியவை, அழியக் கூடியவை..
ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன. அவை இரண்டும் அனித்தியம்.
பால்யம், கௌமாரம், யௌவ்வனனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம்
ஜீவித்தத்தில் வருகிறது. ஆகயால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். என
தெளிவாகிறது. ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது
மூடத்தனம். அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துக்களும்
மாறக்குடியவை, கிரமேண அழியக்குடியவை. ஏது சாச்வதமல்லவோ அது மாயாஸவரூபம்
என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகை துறந்து (விட்டு)
நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உண்ர்ந்து அதாகவை பரிணமிக்க வேண்டும்.
ஆனால்தான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் என கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு
“ப்ரஹ்ம்ம
ஸத்யம் ஜகன் மித்யா” (ப்ரஹ்மம் ஒன்றுதான்
ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை என்ற
தத்தவத்தை நிலை நாட்டுகிறார். அப்ப்டி ப்ரஹ்ம்நிலை ஏயதி விட்டால்
அதில்தானே திடமாக இருக்கவேண்டும். அதைத்தான்
“ஆதம
ஸாக்ஷாத்க்காரரம்”
என குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பத்ர்க்கு
பதிலாக ப்ரஹ்மநிலையில் திகழ்வது என்பது மிக பொருத்தமான விளக்மாகும்.
12
தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:
ஸாரம்:
இரவும் பகலும்,
உதயாஸ்தமன்ங்களும், காற்றுக்காலமும் வஸ்நத காலமும் மாறி மாறி வந்தவண்ணம்
இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை ந்லிந்துகொண்டு வருகிறது,
ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.
விளக்கம்:
நாம் உலகில் வாழ்ந்து
வந்தாலும் உலக்நீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதை தெளிவாக
தந்துள்ளார். பார்ப்போம். இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம்,
வ்ஸந்தகாலம் முதலியவை மாறுகிறது.
iஇப்படி
காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் ந்மது வாழ்க்கையும் மாறி மாறீ
வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவ்வனம், வார்த்தக்யம்) இது உலம
நியதி (Natural
Law).
சுருங்க சொன்னால் உலகிலுள்ள
எல்லாமே மாறக்குடியவை. இது நம் கையில் இல்லை, அது உலக நியதி. அப்படி
உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை? எப்பொழுதும்
நாம ஆசாபாசத்தில் உழ்ன்றவண்ணம் இருக்கிறோம். இது மதியீனமல்லவா என
|