அய்யப்பன் நாமாவளிகள்
----------------------------
அய்யா என் குலதைவமே சபரீசா என் குைற் தீர்ப்பாயே
உன்னயே நாடிவந்தோம் மறவேனோ
மறவேனோ மறவேனோ என்னாளும் உம்மை
ஹாரங்கள் சூடிடுவோம் அலங்கரங்கள் சைய்தீடுவோம் - அய்யப்பா
கீதங்கள் பாடிடுவோம் மறவேனோ
மறவேனோ மறவேன்மோ என்னாளும் உம்மை
சந்தணம் சார்த்தீடுவோம் நெய்யபிஷேகம் சைய்தீடுவோம் - அய்யப்பா
ஆனந்தம் கொண்டாடுவோம் மறவேனோ
மறவேனோ மறவேனோ என்னாளும் உம்மை
கண்கண்ட தைவமப்பா நீ இந்த கலியுக தைவமப்பா - உன்னை
கண்ணால் கண்டால் போதுமே மறவேனோ
மறவேனோ மறவேனோ என்னாளும் உம்மை
பதினெட்டு திருப்படிகள் கொண்ட பூஜித புஷ்க்கலேசா
மணிகண்ட மஹாப்ரபோ மறவேனோ
மறவேனோ மறவேனோ என்னாளும் உம்மை (அய்யா என்)
---------oOo------oOo---------
அய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா
கார்த்திகை முதல்ந்ாள் வந்திடவே கீர்த்தனை உந்தன்மேல் பாடிடவே
ஸ்தோத்திரம் சைய்ய அருள்வாயே சபரிமாமலை நாயகனே (அய்யப்பா)
உத்தர ந்ாளில் அவதரித்தாய் சத்த்ருஸமஹ்ாரம் செய்ய வந்தாய்
சரவணபவகுஹ ஸோதரனே சபரிமாமலை நாயகனே (அய்யப்ப)
தாரணீ புகழ்சிவ பாலகனே பூரண புழ்க்கலை நாயகனே
கருணை சைய்வாய் வீர மணிகண்டா சபரிமாமலை நாயகனே (அய்யப்ப)
---------oOo------oOo---------
அய்யப்பா ஓடிவாராய் ஸ்வாமியே அய்யப்பா ஓடிவாராய்
அய்யப்பா ஓடிவாராய் ஸ்வாமியே அய்யப்பா ஓடிவாராய்
பந்தளபாலனே பாண்ட்யகுமாரனே
பாபத்தை போக்கியருள அய்யப்பா நீ ஓடிவா (அய்யப்பா)
கற்ப்பூரஜ்யோதியே காந்தமலைஜ்யோதியே
கஷ்டத்தை பொக்கியருள அய்யபா நீ ஓடிவா (அய்யப்பா)
மோஹினிபாலனே மோஹனரூபனே
மோஹத்தை பொக்கியருள அய்யப்பா நீ ஓடிவா (அய்யப்பா)
---------oOo------oOo--------
இந்தப்பாரெல்லாம் உன்னை பாராட்டா இந்த ஊரேல்லம் உன்னை கொண்டாட
ஒரு பச்சைக்குழந்தயாய் அவதரித்தாய் பம்பா ந்திக்கரயில் - உன்மேல்
இச்சைகொண்டு அந்த பந்தளராஜனும் தன்னுடன் கூட்டிசென்றான் (இந்த)
பாலபருவத்தில் கானகம் செல்லவே தாயுன்னை ஏவிவிட்டாள் - அந்த
தாயின் பிணி தீர வேட்டயாடி புலிப்பாலினை கொண்டு வந்தாய் (இந்த)
மண்டலகாலத்தில் மாலயுடன் வ்ருதம் நார்ப்பதும் முடித்து விட்டேன் - திரு
நீலகண்டன் மகன் வீரமனிகண்டன் நாமத்தை பாடிடுவேன் (இந்த)
சபரிமலயில் உன்ஸ்வய ரூபத்தை கண்டுகளித்திடவே - இந்த
காடுமலை எல்லாம் கடந்துவந்த என்னை காற்ப்பதுன் பாரமன்றோ (இந்த)
---------oOo------oOo---------
உன்னிடம் நெருங்குகிறேன் அய்யனே அருள்புரிவாய்
எந்தனுள்ளம் கவர்தவனே காந்தமலை நாயாகனே (உன்னிடம்)
மண்டல காலம் தன்னில் மாலயுடன் வ்ருதமிருப்பேன்
மன்னவா உந்தன் நாமம் அந்திபகல் பாடிடுவேன்
பள்ளிக்கெட்டு சுமடேந்தி காடுமலை ஏறிவந்தேன்
மாதவமைந்தா உன்னை காணவே ஓடிவந்தேன் (உன்னிடம்)
பொன்னு பதினெட்டுபடி துள்ளி துள்ளி நான் கடந்தேன்
பொன்னம்பலம் தன்னில் உன்னை கண்டு நான் மதி மறந்தேன்
சபரிமலை உச்சியிலே என்னதான் அதிசயமோ
மகரம் முதல் நாளின் உன்னை காணவே கண் கோடிவேண்டும் (உன்னிடம்)
---------oOo------oOo--------
எந்தமலை ஸேவித்தாலும் தங்கமலை வைபோகம்
என்கிலும் நான் கண்டதில்ல்யே என்கிலும் நான் கண்டதில்ல்யே (எந்த)
கோடி ஸூர்யன் உதிக்கும் மலை கோமளாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் அய்யன் வாழும் மலை (எந்த)
பாரிலுள்ளோர் எல்லாம் புகழும் மலை பரவச நிலயை கொடுக்கும் மலை
பாபவினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை (எந்த)
சபரிந்ாயகா சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
ஸகல வினைகளும் ஸகல குறைகளும் ஸகல பாபங்களும் தீருமே
மதகஜானனா குஹஸஹோதரா வருக வருக என்று பாடினால்
ஸகல ஸுகங்களும் ஸகல ஸம்பத்தும் ஸகல ஸௌபாக்யமும் கிடைக்குமே
ஸ்வாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் அய்யப்பா
---------oOo------oOo--------
(கெதாரகௌலை ராகம்)
என்னவரம் வேண்டும் கேளுங்கள் - சபரி
மன்னன் அருளுவான் வாருங்கள்
பொன் நம்பல மேட்டில் கூடுங்கள் - அவன்
பொன்னடியை பணிந்து பாடுங்கள் (என்னவரம்)
மண்டல நோன்பிருந்து மணிமாலயும் அணிந்து
ஆனுதினம் தவராமல் சரணம் சொன்னால்
மணிகண்ட பெருமானின் பெருமயை சொன்னபேர்க்கு
சாச்வத நலம் கூடும் ஹரிஹர ஸுதனிடம் (என்னவரம்)
---------oOo------oOo--------
எங்கும் நிறைந்தாயே எங்கம் மறைந்தாயோ
எங்கும் உன்னை நான் தேடி அலைந்தேனே சரணம் பொன்னய்யப்பா (எங்கும்)
பம்பயாற்றில் பிறந்து வளர்ந்து பந்தள ராஜனிடம் வளர்ந்த மைந்தா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா
சரணம் சரணம் சரணம் பொன்னயயபா (எங்கும்)
ஸ்வாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா
ஆச்சன் கோவிலரசே சரணம் பொன்னய்யப்பா
ஆரியங்காவய்யாவே ஸ்வாமி பொன்னய்யப்பா
குளத்துப்புழை பாலகா சரணம் பொன்னய்யப்பா
பதினெட்டம் படியே சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரீசா சரணம் பொன்னய்யாப்பா
கர்ப்பூர ஜ்யோதியே சரணம் பொன்னய்யப்பா
காந்தமலை ஜ்யோதியே சரணம் பொன்னய்யப்பா
பக்தர்களை கார்தருள்வாய் சரணம் பொன்னய்யாப்பா
பக்தர்களை கார்தருள்வாய் சரணம் பொன்னய்யாப்பா (எங்கும்)
---------oOo------oOo--------
என்னய்யா மணிகண்டா அய்யப்ப சரணம்
என் நெஞ்சம் உருகுதய்யா
காந்த மலை ஜ்யோதி மணிகண்டன் சிரிப்பு
பக்த்தரை மயக்குதய்யயா (என்னய்யா)
மணிகண்ட ஸ்வாமியின் மணிமாலை
என் கழுத்துக்கு பொருத்தமய்யா - அந்த
ஆய்யப்ப பக்த்தரை பர்த்தாலும்
அவற் கண்ணுக்கு தெரியுமய்யா
எருமேலி பேட்டயிலே வேழங்கள் போட்டு
துள்ளி நான் ஓடிவரவா
என் மெய்யா என் சாஸ்தா என் மணிகண்டா
கெட்டோடு நான் வரவா (என்னய்யா
மாளிகப்புறத்தாம்ம லோக மஞ்ச மாதா
அந்த சபரியிலிருக்குதய்யா
சிங்கார சபரியில் அய்யப்ப கீர்த்தனம்
தினம் தினம் நடக்குதய்யா
எருமேலி பேட்டயிலே வேழங்கள் போட்டு
துள்ளி நான் ஓடிவரவா
என் மெய்யா என் சாஸ்தா என் மணிகண்டா
கெட்டோடு நான் வரவா (என்னய்யா
---------oOo------oOo--------
என்னப்பனல்லவா அய்யப்ப ஸ்வாமியே
அய்யப்ப ஸ்வாமியே பொன்னம்பலவாஸா
பொன்னம்பல வாஸா கம்பங்குடி தாஸா
கம்பங்குடி தாஸா காந்தமலை வாஸா
காந்தமலை வாஸா கருணா விலாஸா
கருணா விலாஸா பூர்ணா மனோஹரா
பூர்ணா மனோஹரா சரணம் ஸர்வேச்வரா (என்னப்பன்)
---------oOo------oOo--------
கிரிவாஸா கிரிவாஸா சபரிகிரிவாஸா - அய்யப்பா
கருணாஸாகர தீனதயாளோ பாஹிமாம் பந்தளதீரா
மலைவாஸா மலைவாஸா காந்தமலைவாஸா - அய்யப்ப
உமாமஹேச்வரன் தாபம் தீர்த்த மொஹினி வரபாலா
கணநாதா கணநாதா பூத கணநாதா - அய்யாப்ப
பூர்ண புஷ்க்கலை இருவர் மணாளா அகிலலோகநாதா
மணிகண்டா மணிகண்டா வீரமணிகண்டா - அய்யப்பா
வேங்கயுடன் விளயாடியே வருவாய் சிங்கார மணிகண்டா (கிரிவாஸா)
---------oOo------oOo--------
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
மண்ிகண்ட ஸ்வாமிக்கு மண்டலகாலத்தில் கொண்டாட்டம்
திண்டாட்டமாம் திண்டாட்டம்
அய்யப்பன் நாமத்தை சொல்லாதபேருக்கு திண்டாட்டம் (கொண்)
மாலை அணிந்து வ்ருதமிருப்பது
மனதுக்கு கொண்டாட்டம் - இருமுடி
கெட்டும் சுமந்து காட்டில் நடப்பது
காலுக்கு கொண்டாட்டம் (கொண்)
எருமேலிசென்று வேஷங்கள் போட்டு
துள்ளுவதும் ஒரு கொண்டாட்டம்
(ஸ்வாமி திந்தக்கத்தோம் அய்யப்பன் திந்தக்கத்த்தோம்
திந்தக்கத்தோம் திந்தக்கத்தோம் ஸ்வாமி திந்தக்கத்தோம்)
ஆரியங்காவ்ினில் பூரணபுஷ்க்கலை
நாதருக்கும் ஒரு கொண்டாட்டம் (கொண்)
தேங்காய் உடைத்து பதினெட்டுபடி
தாண்டுவதும் ஒரு கொண்டாட்டம்
தேவர்கள் பூஜிக்கும் சாஸ்தாவின் ஸன்னிதி
சேருவதும் ஒரு கொண்டாட்டம் (கொண்)
சபரிமலயில் ஸ்வாமிதரிசனம்
கண்ணுக்கு கொண்டாட்டம் - அங்கே
சம்புகுமாரனின் நாமஸங்கீர்த்தனம்
காதுக்கு கொண்டாட்டம் (கொண்)
---------oOo------oOo---------
சபரிகிரி வாஸனே ஸாத்வீககுண ஸாதுஜன நேசனே
மகிழியை வதம் செய்தாய் மன்னன் குறை தீர்த்தாய்
மாசத்த மணிக்ண்டனே - ஸ்வாமீ (சபரிகிரி
பாடினேன் உன்புகழை தேடினேன் உன் அருளை
கூவினேன் சரணம் என்று - அய்யப்பா (சபரிகிரி
---------oOo------oOo--------
சபரிமலை ஆண்டவனே சங்கரனார் திருமகனே
ஸகலலோக நாயகனே சரணம் என்று பாடிடுவோம்
பந்தளத்து பாலகனே பரமனுக்கு பிறந்தவனே
பம்பயாற்றில் வளந்தவனே பணிவுடனே பாடிடுவோம்
பூதலத்தில் பிறந்தவனே பூத கணநாயகனே
பக்த பரிபாலகனே பக்தியுடன் பாடிடுவோம்
குமரனுக்கு இளயவனே கானகத்தில் வஸிப்பவனே
கருணை உள்ளம் கொண்டவனே கனிவுடனே பாடிடுவோம் (சபரிமலை)
---------oOo------oOo--------
சபரிமலை அம்பல நடயில் ஒருதிவஸம் ஞான் போகும்
ஸன்னதி வாதில் துற்க்கும் நேரம் சம்புகுமாரனே காணும் (சபரிமல)
மோஹினி சுதனே பாடும் ஞான் மோஹன ராகம் பாடும் ஞான்
மண்டலகாலம் மாலயணிந்து மதுர கீதம் பாடும் -
ஞான் மதுர கீதம் பாடும் (சபரிமல)
பம்பாந்தியில் நீராடீ பந்தள பாலனே பூஜிக்கும்
பத்தும் எட்டும் படிகளேறி பக்திகானம் பாடும் - ஞான்
பக்திகானம் பாடும் (சபரிமல)
---------oOo------oOo--------
சாஸ்தா சபரிமலை சாஸ்தா உந்தன் சரணம் அல்லாதில்லயே
உன்னை கொண்டாடினோம் உன்மேல் பண்பாடினோம்
அன்பை தந்தாளும் மணிகண்டனே (சாஸ்தா)
கொடும் கானனம் தன்னில் பிரந்தாயப்பா
கொண்டாடும் சேயாக வளர்ந்தாயப்பா
மணிமஞ்சம் தனில் நீயும் துயின்றாயப்பா
மணிகண்டா அதை ஏன் நீ துறந்தாயப்பா (சாஸ்தா)
மனமென்னும் திருக்கொயில் திற்தேனப்பா - அதில்
மணிகண்டன் உருவத்தை நிைற்த்தேனப்பா
ஏல்லொரும் ஒன்றென்று உரைத்தாயப்பா - அந்த
நல்லொர்கள் உனை நாட சைதாயப்பா (சாஸ்தா)
---------oOo------oOo--------
சாஸ்தாவே கைதொழாம் கேள்க்குமாறாகணம்
பாவமாம் அடியேனே காக்குமாற்ாகணம்
ஏன்னுள்ளில் பக்தி உண்டாகுமாற்ாகணம்
நின்னே ஞான் என்னுமே காணுமாற்ாகணம்
பாரெல்லாம் உண்டாகான் காரணம் நீயல்லோ - என்னே
பாலிச்சு கொள்வதும் நீதானல்லயோ (சாஸ்தாவே)
---------oOo------oOo--------
சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்ய்ப்பா
மோஹினி ஸுதனே சரணம் பொன்னய்யப்பா
ஸவாமி சரணம் அய்யப்பா
மோஹன ரூபா சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா (சரணம்)
அச்சங்கொவிலரசே சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா
ஆரியங்காவய்யனே சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா (சரணம்)
எருமேலி ஈசனே சரணம் பொன்னயாபா
ஸ்வாமி சரணம் அய்யப்பா
எங்கும் நிரை ஜ்யொதியே சரணம் பொன்னய்யாபா
ஸ்வாமி சரணம் அய்யப்பா (சரணம்)
கர்ப்பூர ஜ்யோதியே சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா
காந்தமலை ஜ்யோதியே சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா (சரணம்)
எங்கள்குல தைவமே சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா
எங்கலை கார்த்திடுவாய் சரணம் பொன்னய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா (சரணம்)
---------oOo------oOo--------
சரணம் சரணம் சரணமப்பா ஸ்வமியே சரணம் சரணமப்பா
சரணம் சரணம் சரணமப்பா ஸ்வமியே சரணம் சரணமப்பா (ச்ரரணம்)
அச்சன்னொரு மலயுண்டு கைலாஸம்
அம்மக்கொரு மலயுண்டு ஏழுமலா
ஜ்யேஷ்டன்ென்ாரு மலயுண்டு பழனிமலா - என்டே
அய்யப்பன்ென்ாார் மலயுண்டு சபரிமலா (ச்ரணம்)
எனிக்கொரு லக்ஷ்யமுண்டு சபரிமலா
எனிக்கொரு மோஹமுண்டு திவ்ய தர்சனம்
எனிக்கொரு வழி பதினெட்டாம் படீ
எனிக்கொரு மந்த்ரம் சரணமய்யப்பா (சரணம்)
ஏனிக்கென்டே கழுத்தில் நிறமாலா
எனிக்கென்டே அரயில் கறுப்பு வஸ்த்ரம்
எனிக்கென்டே நாவில் சரணம் விளி
எனிக்கொரு லக்ஷ்யம் சபரிமலா (சரணம்)
---------oOo------oOo--------
சரணமய்யப்பா ஸ்வாமி சரணமய்யப்பா
சரணமய்யப்பா ஸ்வாமி சரணமய்யப்பா
இருமுடியை சுமந்துவந்தேன் இரக்கமில்லயா (சரணம்)
இைற்வா உன் சோதனைக்கோர் அளவுமில்லயா
அழுதயிலே குளித்துவந்தேன் அற்ியவில்லயா
அங்கே கல் எடுத்துவைத்தேன் நினைவுமில்லயா
கரிமலயில் ஏற்ிவந்தேன் கவனமில்லயா
கருடன் என்னைக்கண்டதாக சொல்லவில்லயா (சரணம்)
பம்பயிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லயா
பம்பாந்தி போஜனம் நீ அருந்தவில்லயா
பம்பயிலே விளக்கெடுத்தேன் பார்க்கவில்லயா
பகவானே உனக்குக்கூட ஸாக்ஷிதேவயா (சரணம்)
பதினெட்டுபடிகளேறி வரவுமில்லயா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேள்க்கவில்லயா
கொடிமரத்தை சுற்றிவந்தேன் காணவில்லயா
கூடிந்ின்ற பக்தர்களை கேட்டுப்பாரயா (சரணம்)
நெய்யபிஷேகம் சைய்தேன் நினைவுமில்லயா
மனமுருகி பாடியதை கேள்க்கவில்லயா
அய்யா உன் சரணமென்று கதறவில்லயா
அகிலமெல்லம் காத்திருளும் ஜ்யோதியல்லவா (சரணம்)
---------oOo------oOo--------
சொல்ல சொல்ல தித்திக்குமே அய்யப்பன்ின் நாமரஸம்
சொல்ல சொல்ல தித்திக்குமே அய்யப்பன்ின் நாமரஸம்
எல்லயில்லா இன்பம் தனில் எங்கும் காணா ஈன்ற ரஸம் (சொல்ல)
வல்வினை அகன்றுவிடும் வஞ்சனை ஒழிந்துவிடும்
கல்நெஞ்சம் உருகிவிடும் காலபயம் ஓடிவிடும் (சொல்ல)
கல்லாததை அறியவைக்கும் கருணை உள்ளம் படைக்கவைக்கும்
நல்லதயே நாடவைக்கும் நான் என்பதயே ஒழிக்கும் (சொல்ல)
காலந்ிலை கருதவேண்டாம் காடுமலை சுற்றவேண்டாம்
மேலாம்தவம் புரியவேண்டாம் மேன்மயெல்லாம், தானேவரும் (சொல்ல)
---------oOo------oOo--------
நீல வஸ்த்ர தாரியே ஸ்வாமீ அய்யபா
நித்யப்ரஹ்மசாரியே சரணம் அய்யபா
பம்பாநதி ஜாதனே ஸ்வாமீ அய்யப்பா
பஞ்சகிரி வாஸனே சரணம் அய்யபா
தேவ தேவ தேவோத்தமா ஸ்வாமீ அய்யப்பா
வேதாகம பூஜிதா சரணம் அய்யப்பா
ராஜ ராஜ ராஜகம்பீரா ஸ்வாமீ அய்யப்பா
ராஜகுல திலகா சரணம் அய்யப்பா
மந்தஹாஸ வதனா ஸ்வாமீ அய்யப்பா
பந்தளத்து பாலனே சரணம் அய்யபா
விச்வம் நித்யம் கைதொழும் ஸ்வாமீ அய்யப்பா
வீரமணிகன்டனே சரணம் அய்யப்பா (நீலவஸ்த்ர)
---------oOo------oOo--------
பூதாதிந்ாதா மோஹினிபாலா சாந்திதா சபரிகிரீசா
கருணாஸாகர தீனதயாளோ பாஹிமாம் பந்தளதீர்ா
---------oOo------oOo--------
மதகஜவாஹன மஹாமதே ஹரிஹரஸூனோ நமோஸ்துதே
---------oOo------oOo--------
மலைவாழும் மணிகண்டனே - சபரி
மலைவாழும் மணிகண்டனே
உனக்கோர் இடம் இல்லாயா - பாரில்
உனக்கோர் இடம் இல்லயா - காட்டில்
தனக்கோர் இடம் தேடி தவக்கோலம் கொண்டாயே (மலை)
புலிக்கூட்டம் தனை நாடினாய் - கொடிய
தாயின் தலைவலி நீங்க வனம் நாடினாய்
புவி எங்கும் ஒளியாகினாய் - இந்த
உலகோரும் உன்னை நாட ஓம்காரப்பொருளானாய் (மலை)
---------oOo------oOo--------
மலயாளம் தனில் வாழும் தேவா
மனதினில் குடிகொள்ளும் முருகனின் இளையோனே (மலயாளம்)
அளவில்லமலைமீதில் அமர்தவனே தேவா
பலந்ாளும் நான் சைய்த பாபத்தை தீர்ப்பாயே
என் பெரும்பூமானே அம்பலத்தரசே நீ
அருள்புரிவாய் எந்தன் நிலைகண்டு நீ (மலயாளம்)
ச்லொகம்:
?தாயாக உலகினில் கனிவோடு காக்கின்ற ஸச்சிதானந்த மூர்த்தே
அகமதில் ஜ்யோதியாய் எங்கும் விளங்கின்ற அத்வைதமான அமுதே
காதலாய் உன்னை அந்திபகலில்லாமல் அய்யப்பா என்று ஓதினோர்க்கு
ஜயமுண்டு குணமுண்டு மதியுண்டு மோஹினி குமாரனே?
அமரேசா உன்னைக்காண அலைந்திடும் என்னைப்பாராய்
அழுதேனே உன்னைக்காண அழுதாந்தி தன்னில்
முன்முடி உனக்காக பின்முடி எனக்காக
தலைத்ன்னிலே வைத்து நான் வந்தேனே (மலயாளம்)
---------oOo------oOo--------
மோஹினி ஸுதனே பூதந்ாதனே சபரிகிரி வாஸா
சபரிகிரி வாஸா சபரிகிரி வாஸா சபரிகிரி வாஸா (மோஹினி)
---------oOo------oOo--------
ஹரிஹரஸுதனே சரணம் சரணம் அய்யப்பா
அந்ாதிமூலப்பொருளே சரணம் அய்யப்பா (ஹரிஹர)
பரம தயாள குணாளா சரணம் அய்யப்பா
பரந்தாம ஜய தாரக நாம அய்யப்பா
பந்தளகுந்தள சுந்தரரூபா அய்யப்பா
பாண்டியராஜ குமாரா சரணம் அய்யப்பா (ஹரிஹர)
சந்தணவர்ண ஸுவர்ணசரீரா அய்யப்பா
சபரிகிரீசா ஹ்ருதய குஹேசா அய்யப்பா
அன்னதான விஸ்தார உதாரா அய்யப்பா
அகிலலோக சரணாகத வத்சல அய்யப்பா (ஹரிஹர)
என்னயும் ஏற்றருள் சைய்வாய் சரணம் அய்யப்பா
ஏகயோக ஸஜ்ஜனகுருந்ாதா அய்யப்பா
மருவுமகற்றிய வாசக ரமணா அய்யப்பா
மங்கள வாழ்வு வழங்கிட வா வா அய்யப்பா (ஹரிஹர)
---------oOo------oOo--------
ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் அய்யப்பா
சபரிகிரீசா சாச்வதரூபா ஸ்வாமியே சரண்ம் அய்யப்பா
கலியுகவரதா கருணாஸாகர ஸ்வாமியே சரணம் அய்யப்ப
ஆஸ்ரீதவரதா ஆபத்பாந்தவா ஸ்வாமியே சரனம் அய்யப்ப
வில்லாளிவீரா வீரமணிகண்டா ஸ்வாமியே சாரணம் அய்யப்பா
மஹிஷிமர்த்தனா மதகஜவாஹனா ஸ்வாமியே சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் அய்யப்பா ஸ்வாமியே சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் அய்யப்பா ஸ்வாமியே சரணம் அய்யப்பா
---------oOo------oOo--------
ஸ்வாமீ பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யபா
மங்கள தாயகனே சரணமய்யப்பா
கர்ப்பூரஜ்யோதி என்றும் காந்தமலை ஜ்யொதி என்றும்
காண்போர்கள் புகழ்வதெல்லாம் உம்மைத்தானா
ஆடிப்பாடி புகழ்வதெல்லாம் உம்மைத்தானா (ஸ்வாமீ)
பம்பயில் வாஸனென்றும் பதினெட்டம் படியனென்றும்
பக்த்தோர்கள் புகழ்வதெல்லம் உம்மைத்தானா
ஆடிப்பாடி புகழ்வதெல்லாம் உம்மைத்தானா (ஸ்வாமீ)
சபரிகிரீசனென்றும் சாந்தஸ்வரூபனென்றும்
ஸாதுக்கள் புகழ்வதெவ்ல்லாம் உம்மைத்தானா
ஆடிப்பாடிபுகழ்வதெல்லாம் உம்மைத்தானா (ஸ்வாமீ)
---------oOo------oOo--------
ஸ்வாமீ சரணம் அய்யப்பா ஸ்வாமீ சரணம் அய்யப்பா
மண்டலம் முதல்ந்ாள் மாலை அணிந்து
பக்தியாகவே விருத்மிருந்தேன்
மணிகண்டனே உன்னை மனதில் நினைது
ஸதா பஜனைகள் பாடிவந்தேன்
ஸ்வாமீ அருள் புரிவாய் ஸ்வாமீ சரணமப்பா (ஸ்வாமீ)
பம்பயில் நீராடீ பாபங்கள் போக்கி
பொன்னுபதினெட்டு படி கடந்து வந்தேன்
புண்ய தரிசனம் கண்டு மகிழ்திட
இருமுடி கெட்டயும் சுமந்து வந்தேன்
நெய்யாபிஷேகம் சைய்வேன் ஸ்வாமீ சரணமப்பா (ஸ்வாமீ)
---------oOo------oOo--------
ஸ்வாமி சரணம் அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம் ஸ்வாமி சரனம்
உளருகின்றேன் நான் உன்னை நம்பியே
ஒம்கார கணபதியின் தம்பியே உன்னை நம்பியே
உளருகின்றேன் நான் உன்னை நம்பியே
கழலிடும் வல்வினை காமக்க்ரோதலோபம்
கஷ்ட்டப்ப்டுத்தி என்னை கவலைக்குள் ஆக்குதய்யா (ஸ்வாமீ)
அழகிய இலக்கணம் இலக்கியம் நான் அறியேன்
ஆனாலும் உன்னை பாடிட வந்தேனய்யா - உன்னிடம்
பழகிய நணபர்கள் பாவகீதம் பாடும்
பாட்டில் மயங்கி என்னை மறவாயோ அய்யா (ஸ்வாமீ)
---------oOo------oOo--------
ஸ்ரீதர்ம சாஸ்தா பாஹிமாம்
ஸ்ரீசபரீசா பாஹிமாம்
மணிகண்டனே நீ பாஹிமாம்
கலிந்ாசனா நீ பாஹிமாம் (ஸ்ரீதர்ம)
மொஹினிஸுதனே மோஹனரூபா
மோஹம் அகற்றுக பாலனே
மண்டலகாலமிதா வன்னல்லோ - நின்
மணிமாலயும் கழுத்தில் வீணல்லோ - என்
மனதாகயும் அலிஞ்சு போயல்லோ
என்னே கார்த்தீடுகா நீ அய்யனே (ஸ்ரீதர்ம)
வன்புலிமுதுகில் கயறிய பகவான்
வன்மல கயற்றுகா ஞங்களே - நின்
ஸ்வயரூபத்தே ஞங்கள் காணுவான்
ஈ மலயாகயும் கடன்னு வன்னல்லோ - மா
மணிபீடத்தில் வாழும் தைவமே
என்னே கார்த்தீடுகா நீ அய்யனே (ஸ்ரீதர்ம)
---------oOo------oOo---------
ஸ்ரீசபரீசா ஜய் சபரீசா ஜெய் ஜெய் சபரீசா
---------oOo------oOo--------